For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாகித்ய அகாடமி விருது பெற்ற தி க சிவசங்கரன் மரணம்

Google Oneindia Tamil News

நெல்லை: சாகித்ய அகாடமி விருது பெற்ற முதுபெரும் எழுத்தாளர் நெல்லை மண்ணின் மைந்தர் விமர்சகர், தி க சிவசங்கரன் நெல்லையில் காலமானார்

தி. க. சிவசங்கரன் மார்க்சிய திறனாய்வாளர். 1925ல் திருநெல்வேலி நகரில் பிறந்தவர். தி.க.சி.யின் வாழ்க்கை குறித்தும்-எழுத்துலகம் குறித்தும் 2007-ஆம் ஆண்டு சென்னையில் இயங்கி வரும் தமிழ்க்கூடம் என்ற கலை-இலக்கிய அமைப்பு ஒரு ஆவணப் படத்தை உருவாக்கியது.

21-இ,சுடலை மாடன் தெரு,திருநெல்வேலி டவுன் என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தை எழுத்தாளரும் இயக்குநருமான எஸ். ராஜகுமாரன் எழுதி-இயக்கியுள்ளார்.

திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் 2008-க்கான சிறந்த ஆவணப்பட விருது மற்றும் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த ஆவணப்பட விருது-2008 ஆகிய விருதுகள் இந்த ஆவணப்படத்திற்கு கிடைத்தன.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், 25.3.2014 இரவு 11.30 மணியளவில் காலமானார்.

இவரது மதிப்புரைகளும் கட்டுரைகளும் முதிய வயதில்தான் திகசி கட்டுரைகள் என இரு பகுதிகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. இத்தொகுதிகளுக்கு 2000 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது

Writer T K Sivasankaran dies

மறைவுக்கு முன் நல்லகண்ணுவை பார்க்க விரும்பிய தி.க.சி.

23.ந் தேதி இந்திய கம்யூ.கட்சியை சார்ந்த சேவியர், தி.க.சி.யை பார்க்க சென்றபோது அவரிடம் தி.க.சி. அவருடைய சக தோழர், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவை நான் சந்திக்கவேண்டும் சொல்லியுள்ளார்.

இதையடுத்து நேற்று மாலை 4 மணிக்கு நல்லக்கண்ணுவை சேவியர் அழைத்துச் சென்றுள்ளார்..நான் நல்லகண்ணு வந்துள்ளேன் என்று கூப்பிட்டார். அதற்கு தி.க.சி. என்னால் முடியவில்லை என்றுமட்டும் பதில் சொல்லியுள்ளார். நலம் விசாரித்தப்பின் சிறிது நேரம் அவரோடு அமர்ந்த நல்லக் கண்ணு புறப்பட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் மரணத்தைத் தழுவியுள்ளார். இரவில் அவர் மறைந்த செய்தி கேட்டு நல்லக்கண்ணு வேதனை அடைந்துள்ளார்.

தி.க.சி.க்கு மார்ச் 30 பிறந்தநாளாகும். அன்றுடன் அவருக்கு 90 வயது நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Famous writer and Sahitya Acadamy award winner T K Sivasankaran has died in Nellai after illness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X