ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » உலகம்
உலக செய்திகள்

Osama Bin Ladenமும்பை தாக்குதலில் ஒசாமாவுக்கு முக்கிய பங்கு: அமெரி்க்கா

இஸ்லாமாபாத்: கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு மும்பை தாக்குதல்களில் நேரடி தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத் வீட்டில் வைத்து அமெரிக்கப் படைகளால் கடந்த ஆண்டு மே மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். அதையடுத்து அந்த வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், கணினி ஆகியவற்றை
ஆஸ்திரேலியாவில் முகாமிடத் தொடங்கியது அமெரிக்க கடற்படை-வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

டார்வின்: ஆஸ்திரேலியாவின் வடபகுதி துறைமுகமான டார்வின் நகருக்கு வந்த 200 வீரர்களைக் கொண்ட அமெரிக்க கடற்படைக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு மேற்கொண்ட பயணத்தின்போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி முதல்கட்டமாக வடக்கு ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டுள்ளன.அமெரிக்கப் படைகளை வரவேற்றுப் பேசிய ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், அமெரிக்கப் படையின்
Jenna Talackovaநான் பெண் இல்லையா...அழகிப் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட கனடா திருநங்கை போர்க்கொடி!

நான் ஒரு பெண் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே என்னை மிஸ் கனடாப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கனடாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.அந்த அழகியின் பெயர் ஜென்னா தலக்கோவா. இவர் மிஸ் கனடா போட்டியின் இறுதிச் சுற்று வரை வந்தார். ஆனால் அதற்கு மேல் இவரை அனுமதிக்க
Hafiz Saeedஅமெரிக்கா எனது தலைக்கு விலை வைத்ததே தீவிரவாதம்தான்.. ஹபீஸ் சயீத்

இஸ்லாமாபாத்: அமெரிக்கா எனது தலைக்கு ரூ. 50 கோடி விலை வைத்திருப்பதே ஒரு தீவிரவாதச் செயல்தான். இந்தியாவின் தூண்டுதலால்தான் இவ்வாறு அறிவித்துள்ளது அமெரிக்கா என்று பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை நிறுவியவரான ஹபீஸ் முகம்மது சயீத் தெரிவித்துள்ளான்.லஷ்கர் இ தொய்பாவை நிறுவி பின்னர் அதன் பெயரை ஜமாத் உத் தவா என்று
Osama Bin Laden2 வாரங்களில் நாடு கடத்தப்படும் ஒசாமா மனைவிகள், குழந்தைகள்

இஸ்லாமாபாத்:  கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் 3 மனைவிகள், 2 மகள்கள் மீது சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு வந்து தங்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு ஒன்றரை மாத சிறை தண்டனையும், அதன் பிறகு அவர்களை நாடு கடத்தவும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அல் கொய்தா தலைவர்
அமெரிக்க கல்லூரியில் 7 பேரை சுட்டுக் கொன்ற முன்னாள் மாணவன்

ஓக்லேண்ட்:  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லூரிக்குள் புகுந்த முன்னாள் மாணவன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 7 மாணவர்கள் இறந்தனர், இந்திய வம்சாவழி மாணவி உள்பட 3 பேர் காயமைடந்தனர்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஓக்லேண்டில் உள்ளது ஆய்கோஸ் பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழக கல்லூரிக்குள் கொரிய வம்சாவழியைச் சேர்ந்த கோ(43) என்பவன் நேற்று அத்துமீறி புகுந்தான். வகுப்புறைக்குள்
லஷ்கர் ஏ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீதின் தலைக்கு 10 மில்லியன் டாலர்: அமெரிக்கா

வாஷிங்டன்: மும்பை தீவிரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமாக லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஹபீஸ் சயீதின் தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலர்களை பரிசாக அறிவித்துள்ளது.இப்போது ஜமாத் உத் தாவா என்ற அமைப்பின் தலைவராக உள்ள ஹபீஸ் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். இவர் லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத இயக்கத்தை நிறுவியவர்களுள் முக்கியமானவர் ஆவார். இவர்
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி 29 பேர் பலி

மாஸ்கோ: சைபீரியா நோக்கி சென்ற ரசிய பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 29 பேர் பலியானதாக தெரிகிறது.ரஷ்ய நேரப்படி காலை 5. 30 மணியளவில் இரட்டை இன்ஞ்சின் பொறுத்தப்பபட்ட ஏ.டி.ஆர்., 72 என்ற ரக விமானம் டியூமென் நகரின் அருகில் உள்ள ரோஷ்சினோ விமான நிலையத்தில் இருந்து சூர்குட் நோக்கி சென்ற புறப்பட்டு சென்றது.இந்த விமானம்
Asif Ali Zardariதீயசக்திகளிடமிருந்து தப்ப சரமாரியாக கருப்பாடுகளை பலி கொடுக்கும் சர்தாரி !

இஸ்லாமாபாத்: தீய சக்திகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள தொடர்ந்து கருப்பு ஆடுகளை பலி கொடுத்தபடி இருக்கிறாராம் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி.பாகிஸ்தானில் மூடநம்பிக்கைகளுக்கு பெயர்போனவர் சர்தாரி. அவரது மத நம்பிக்கை பற்றி அந்நாட்டு ஊடகங்கள் பல்வேறு செய்திகள் வெளியிட்டு வருகின்றன.தீய சக்திகளிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள சர்தாரி கருப்பாடுகளை பலி கொடுப்பதாக அந்நாட்டு ஊடகங்கள்
மியான்மர்: ஆங் சான் சூகியின் ஜனநாயகக் கட்சிக்கு 43 தொகுதிகளில் அமோக வெற்றி

யாங்கூன்: சர்வதேச நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் மியான்மர் நாடாளுமன்றத்தின் 45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 43 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக ஆங் சான் சூகியின் ஜனநாயகக் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இத்தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை.45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 44 தொகுதிகளில் ஆங் சான் சூகியின் ஜனநாயக் கட்சி போட்டியிட்டது. தலைநகர் யாங்கூனில் 4 தொகுதிகளை
ஈரான் விவகாரம்: ஒபாமாவின் பொருளாதார தடை மிரட்டலுக்கு சீனா எதிர்ப்பு

பெய்ஜிங்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க நேரிடும் என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.ஈரானுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக அந்த நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்றும், தற்போது இறக்குமதி செய்யும் நாடுகள் அதை படிப்படியாக குறைக்க வேண்டும் என்றும்
ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது அமெரிக்கா- சீனா, இங்கிலாந்தும் பங்கேற்பு

இஸ்தான்புல்: ஈரானின் அணு சக்தி விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 13, 14 ல் புதிய பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.சவூதி அரேபியாவில் நடைபெற்ற பெர்சிய வளைகுடா அரபு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹிலாரி, அணுசக்தி விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தெரிவித்து வரும் கருத்துகளில்
Aung San Suu Kyiமியான்மரில் 45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்- ஆங் சூகி வெற்றி முகம்?

யாங்கூன்: மியான்மரில் 45 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 1) இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகப் போராட்டத் தலைவர் ஆங் சான் சூகியே அமோக வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது.இத்தேர்தலில், 15 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சூகியும் போட்டியிடுகிறார். ஊரகப் பகுதிகளை உள்ளடக்கிய தொகுதியான காவ்மூ தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.தேர்தல் முடிவுகள்
அரசுக்கு எதிராக தகவல் பரப்பியதாக 16 இணையதளங்களை முடக்கியது சீனா- 6 பேர் கைது

பெய்ஜிங்: சீன அரசைக் கவிழ்க்க ராணுவம் முயற்சிக்கிறது என்று இணையதளத்தில் வதந்தியைப் பரப்பினர் என்ற குற்றசாட்டின் கீழ் 6 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் 16 இணையதளங்களையும் சீனா முடக்கியுள்ளது.meizhou.net, xn528.com. cndy.com.cn உள்ளிட்ட 16 இணையதளங்களில் "சீன தலைநகர் பெய்ஜிங்கில் ராணுவ வாகனங்கள் நுழைந்துவிட்டன... பெய்ஜிங்கில் ஏதோ நடக்கப் போகிறது" என்று வதந்தி
ஆப்கன் நேட்டோ படைகளுக்கு இந்தியா உதவும்?

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினருக்கான உதவிகளை இந்தியா செய்யக் கூடும் என்று தெரிகிறது.பாகிஸ்தானில் இருந்துதான் ஆப்கனில் உள்ள நேட்டோ படைகளுக்கான அனைத்து உதவிகளும் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் நேட்டோ படைகள் எல்லைப் பகுதியில் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் 24 படையினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து நேட்டோ படையினருக்கான விநியோகப் பாதையை பாகிஸ்தான் மூடியது.இது தொடர்பாக
More: 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  Next