மீண்டும் வென்றது ஆக்டோபஸ் பால்-கிளி மணி தோல்வி!

திங்கள்கிழமை, ஜூலை 12, 2010, 9:21 [IST]
அடுத்தடுத்து அட்டகாசமான கணிப்புகளைக் கூறி அது உண்மையிலும் நடந்து பெரும் பிரபலமான ஆக்டோபஸ் பால், கணித்தபடியே இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வென்று விட்டது.

அதேசமயம், நெதர்லாந்து வெல்லும் என கூறியிருந்த சிங்கப்பூர் கிளி மணியின கணிப்பு பொய்த்துப் போய் விட்டது.

உலகம் முழுவதும் ஸ்பெயினே வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே இருந்தது. இந்த நிலையில் அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனி தோற்கும் என கணித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெர்லினைச் சேர்ந்த ஆக்டோபஸ் பால், இறுதிப் போட்டியில் ஸ்பெயினே எனக் கூறி மேலும் பரபரப்பைக் கூட்டியது.
  Read:  In English 
இதனால் வெல்லப் போவது ஆக்டோபஸா, நெதர்லாந்தா என்ற அளவுக்கு நிலைமை மாறிப் போனது. ஆனால் நேற்றைய போட்டியில் ஸ்பெயின் வெற்றி பெற்று, ஆக்டோபஸ் பாலை மேலும் பிரபலமாக்கி விட்டது.

அதேசமயம், நெதர்லாந்துதான் வெல்லும் என கணித்திருந்தது சிங்கப்பூரைச் சேர்ந்த முனியப்பன் என்பவரின் கிளியான மணி. ஆனால் அது பொய்த்துப் போய் விட்டது.

Posted by:
User Comments
Rafeek 13 Jul 2010 12:12 pm
உலக மக்கள் எல்லாம் லூசு இல்லை. ஒரு சில மக்கள் மட்டும் அறியாமையால் நம்பும் இதை பணமாக்க பார்க்கிறான். அதற்க்கு ஆரம்பம். ஒவொரு முறையும் அந்த அக்டோபஸ் வலப்புறம் உள்ள தொட்டியில் போகிறது. அதையே மாற்றி வைத்தால் வேறு தொட்டிக்குள் போகும். எல்லோரும் மடையர்களாக மாறாதீர்கள்.
mandaiyan 13 Jul 2010 11:10 am
கிளி சொன்னுச்சு, எலி சொன்னுசுனு kathai
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs
2nd Preliminary Final , M Chinnaswamy Stadium, Bangalore
Match starts at 08:00 pm IST