4953 91 617 14-football-brazil பிரேசிலில் 2014ல் அடுத்த உலகக் கோப்பை கால்பந்து தொடர்-அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு அடுத்த ஆட்டம் பிரேசிலில்! South Africa festival paves way for Brazil 'festa' | அடுத்த ஆட்டம் பிரேசிலில்! தென் ஆப்பிரிக்காவில் ஒரு மாத காலம் நடந்து வந்த உலகக் கோப்பைக் கால்பந்து திருவிழா முடிந்த அடுத்த சில தினங்களிலேயே பிரேசிலில் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. உலகக் கோப்பைக் கால்பந்து 2014, பிரேசில், சர்வதேச கால்பந்து சம்மேளனம், fifa world cup 2014,football, brazil, fifa
{image-14-brazil-fifa1-200.jpg tamil.oneindia.in}தென் ஆப்பிரிக்காவில் ஒரு மாத காலம் நடந்து வந்த உலகக் கோப்பைக் கால்பந்து திருவிழா முடிந்த அடுத்த சில தினங்களிலேயே பிரேசிலில் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியின் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.
பிரேசில் உலகக் கோப்பைக்கால்பந்துத் தொடருக்கான அதிகாரபூர்வ சின்னத்தை சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் ஜோசப் பிளேட்டர் வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பிரேசில் அதிபர் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
விழாவில் பிளேட்டர் பேசுகையில், ஆப்பிரிக்காவுக்கும், பிரேசிலுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாக நான் கருதவில்லை. இருவரது இசைக் கருவிகளின் சத்தம் மட்டுமே வித்தியாசமாக உள்ளது. மற்றபடி இரண்டிலும் ஒரே பொருள்தான் - மகிழ்ச்சி என்றார் சிரித்தபடி.
ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த நிகழ்ச்சியில்தான் பிரேசில் உலகக் கோப்பைப் போட்டிக்கான சின்னம் வெளியிடப்பட்டது.
பிரேசில் உலகக் கோப்பை - ஒரு மின்னல் பார்வை
- முதல் அணியாக பிரேசில் இந்தத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்த தகுதி அதற்குக்
கிடைத்துள்ளது.
- மொத்தம் 12 நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. அவை பெலோ ஹாரிசான்டே, பிரேசிலியா, குயாபா, குர்டியாபா, போர்ட்டலேசா, மனாஸ், நடால், போர்டோ அலிகிரே, ரெசிஃபே, ரியோடிஜெனீரோ, சால்வடார், சாவோ பாலோ.
- பல நூறு கோடி செலவில் ஸ்டேடியிங்கள் புதுப்பிக்கும் பணி, ரியோடிஜெனீரோ நகரையும், சாவோ பாலோ நகரையும் இணைக்கும் அதி விரைவு ரயில் போக்குவரத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரேசில் அரசும், பிரேசில் கால்பந்து சம்மேளனமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.