ஏடிஎம்மில் கொள்ளையடித்த 4 பேர் கைது-ரூ 21 லட்சம் மீட்பு சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ரூ.21 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,துரைப்பாக்கத்தில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் சில தினங்களுக்கு முன் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் ரகசிய எண்ணை பயன்படுத்தி எந்திரத்தைத் திறந்து ரூ.21 லட்சம் ...