For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முஸ்லிம்கள் மதச்சார்புடன் இருக்க வேண்டும்: ஆம் ஆத்மியின் ஷாஜியா இல்மி பேச்சால் சர்ச்சை

By Mathi
|

டெல்லி: முஸ்லிம்கள் மதச்சார்பற்றவர்களாக இல்லாமல் மதச்சார்புடையவர்களாக இருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷாஜியா இல்மி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'Muslims are too secular,' says AAP's Shazia Ilmi in video

யூ டியூப்பில் ஷாஜியா இல்மி பேசியதாக வெளியாகி இருக்கும் வீடியோ காட்சி சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. அதில், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் மதச்சார்பற்றவர்களாக இருக்கிறார்கள் என்று நான் கூறுகிறேன். அவர்கள் மதசார்புடையவர்களாக இருக்க வேண்டும். அப்படி மதச்சார்புடையவர்களாக இல்லாவிட்டால் அவர்கள் தங்களுக்காக ஓட்டுப்போட போவது இல்லை.

அரவிந்த் கேஜ்ரிவால் உங்களில் ஒருவர். நீங்கள் மதசார்பற்றவர்களாக இருக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ, இது போன்ற அரசியலை நாங்கள் நம்புவதில்லை. இதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்று கூறியுள்ளது. இருப்பினும் ஷாஜியா இல்மி தமது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து ஏதும் தெரிவிக்காமல் வாய் மூடி மெளனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/H2_t8Sn3FTE?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary
In a video posted on YouTube, Shazia Ilmi, a top leader of Arvind Kejriwal's Aam Aadmi Party (AAP), is seen urging Muslim leaders, "I'm saying Muslims are very secular. Muslims need to be communal. A Muslim isn't communal - doesn't vote for his own. Arvind Kejriwal is one of you. You are too ...don't be this secular. Look after your own homes (interests)."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X