For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காமன்வெல்த் போட்டி: பதக்க வேட்டையை தொடங்கிய இந்தியா: 2 தங்கம் உள்ளிட்ட 7 பதக்கங்கள்

By Mayura Akilan

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில், பளுதூக்குதல் மற்றும் ஜூடோ ஆகிய விளையாட்டுக்களில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையை தொடங்கியுள்ளனர். முதல் நாளிலேயே 7 பதக்கங்களை வென்று அவர்கள் அசத்தியுள்ளனர்.

20-வது காமன்வெல்த் போட்டியின் முதல் நாளில் இந்தியாவின் பதக்க பட்டியலை பளுதூக்கும் வீராங்கனைகள் தொடங்கி வைத்தனர்.

தங்கம் வென்ற சஞ்சிதா

தங்கம் வென்ற சஞ்சிதா

48 கிலோ எடைப் பிரிவில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதான சஞ்ஜிதா குமுக்சன், ஸ்நாட்ச் மற்றும் கிளீன் அண்டு ஜெர்க் பிரிவுகளில் அதிகபட்சமாக 173 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் வென்றார். இதே எடைப் பிரிவில் மற்றொரு மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு சாய்கோம் 3 கிலோ குறைவாகத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சுகென்தேய்க்கு தங்கம்

சுகென்தேய்க்கு தங்கம்

ஆண்கள் பளூதூக்கும் போட்டி 56 கிலோ பிரிவில் இந்தியவீரர் சுகென் தேய், தங்கம் வென்றார். இதே பிரிவில் இந்திய வீரர் கணேஷ் மாலி, வெண்கலம் வென்றார்.

பளு தூக்குதலில் 4 பதக்கங்கள்

பளு தூக்குதலில் 4 பதக்கங்கள்

பளு தூக்கும் போட்டிகளில் மட்டும் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 4 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளன.

வெள்ளி வென்ற அஸ்ஸாம் சுஷீலா

வெள்ளி வென்ற அஸ்ஸாம் சுஷீலா

இதே போல் மகளிர் 48 கிலோ ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்துக்கான மோதலில், இந்திய வீராங்கனை சுஷிலா லிக்மபாம், உள்ளூர் வீராங்கனை ரெனிக்சை எதிர்கொண்டார். சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பாக செயல்பட்ட ரெனிக்ஸ், சுஷீலா-வை ஒரே அடியாக இப்போன் முறையில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அஸ்ஸாமைச் சேர்ந்த சுஷீலாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஜூடோ போட்டி:

ஜூடோ போட்டி:

இதே போல் ஆண்களுக்கான ஜூடோ போட்டியில் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் நவ்ஜோத் சனா வெள்ளிப்பதக்கம் வென்றார். ஜூடோ போட்டிகளில் 2 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

4வது இடத்தில் இந்தியா

4வது இடத்தில் இந்தியா

பதக்க பட்டியலில் இந்தியா 2 தங்கம்,3 வெள்ளி,2 வெண்கலம் பெற்று 4வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்துக்கு முதலிடம்

இங்கிலாந்துக்கு முதலிடம்

இங்கிலாந்து 6தங்க பதக்கங்களுடன் மொத்தம் 17 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.ஆஸ்திரேலியா,5 தங்கபதக்கங்களுடன் மொத்தம்15 பதக்கங்களூடன் இரண்டாவதாக உள்ளது.ஸ்காட்லாந்து 4 தங்க பதக்கங்களுடன் மொத்தம் 9 பதக்கங்கள் பெற்று 3வது இடத்திலும் உள்ளது.

Story first published: Friday, July 25, 2014, 9:03 [IST]
Other articles published on Jul 25, 2014
English summary
Indian weightlifter Sukhen Dey got another gold glory for the nation and helped India solidify position in the Commonwealth Games 2014 medal tally. It was a double glory for the weightlifting in the 56 kg category as Sukhen Dey bagged gold and Ganesh Mali won bronze medal. India now stands at the 4th position in the medal table with 2 gold, 3 silver and 2 bronze.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X