For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெலுங்கானாவின் தூதராகும் தகுதி சானியா மிர்ஸாவுக்கு இல்லை- ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து

சென்னை: தெலுங்கானா மாநிலத்தின் பிராண்ட் அம்பாசடராக செயல்படுவதற்கான தகுதியை டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா இழந்து விட்டதாக ஒன்இந்தியா வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் முக்கால்வாசிப் பேர், சானியாவுக்கு அந்தத் தகுதி இல்லை என்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கைத் திருமணம் செய்தவுடனேயே அந்தத் தகுதி சானியாவிடமிருந்து போய் விட்டதாகவும் கூறியுள்ளனர்.

சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தின் விளம்பரத் தூதராக சானியாவை நியமிப்பதாக தெலுங்கானா அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் பாஜகவிடமிருந்து கிளம்பியுள்ளது.

பாஜக ஆட்சேபனை

பாஜக ஆட்சேபனை

சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணந்துள்ளார். எனவே அவருக்கு தெலுங்கானா விளம்பரத் தூதர் என்ற கெளரவத்தைக் கொடுத்தது தவறு என்று பாஜக மூத்த தலைவர் லட்சுமணன் கூறியிருந்தார்.

பாகிஸ்தானின் மருமகள்

பாகிஸ்தானின் மருமகள்

இதுகுறித்து அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் பிறந்தவர் சானியா மிர்ஸா. ஹைதராபாத்தில் குடியேறியவர்தான். ஹைதராபாத்தில் பிறந்தவர் அல்ல. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணந்ததன் மூலம் அவர் பாகிஸ்தான் மருமகளாகி விட்டார்.

தெலுங்கானாவுக்காக குரல் கொடுக்காதவர்

தெலுங்கானாவுக்காக குரல் கொடுக்காதவர்

மேலும் தெலுங்கானா மாநிலத்திற்காக குரலே கொடுக்காதவர் சானியா. அப்போராட்டத்தில் பங்கேற்காதவர். அவருக்கு தெலுங்கானா மாநில தூதர் என்ற அந்தஸ்து தருவது கண்டனத்துக்குரியது. தவறான முடிவாகும். ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் முஸ்லீம்களின் வாக்குகளைக் கவருவதற்காகவே இந்த அறிவிப்பை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார் என்று அவர் சாடியிருந்தார்.

ஒன்இந்தியா வாசகர் கருத்து

ஒன்இந்தியா வாசகர் கருத்து

இந்த நிலையில் சானியா மிர்ஸாவை தெலுங்கானா மாநில தூதராக நியமித்தது குறித்து தனது வாசகர்களிடையே ஒன்இந்தியா கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் இதோ...

பாஜக எதிர்ப்பு சரியே

பாஜக எதிர்ப்பு சரியே

பாஜக எதிர்ப்பு சரியே. சோஷயப் மாலிக்கை மணம் முடித்தபோதே அந்த உரிமையை சானியா இழந்துவிட்டார் என்று 71.56 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு ஆதரவாக கிடைத்துள்ள வாக்கு 13,868 ஆகும்.

பாஜக எதிர்ப்பு தவறு

பாஜக எதிர்ப்பு தவறு

பாஜக எதிர்ப்பு தவறு, பாகிஸ்தானியரை மணந்தாலும் கூட சானியா இந்தியாவின் புதல்விதான் என்று 28.44 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். இதற்கு ஆதரவாக கிடைத்துள்ள வாக்குகள் 5511 ஆகும். மொத்த வாக்குகள் எண்ணிக்கை 19,379 ஆகும்.

Story first published: Friday, July 25, 2014, 17:29 [IST]
Other articles published on Jul 25, 2014
English summary
More than 70% readers of Oneindia have said against the appointment of Tennis ace Sania Mirza as Telangana's brand ambassador.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X