For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

70 ஆயிரம் பிறந்த குழந்தைகளுக்கு எய்ட்ஸ் - நைஜீரியாவில் தான் இந்த கொடூரம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அபுஜா: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயுடன் பிறந்திருப்பதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனர் கூறியுள்ளார்.

நைஜீரிய நாட்டில் உள்ள ஓகுன் மாநில அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரி ஜாண்இடாகோ இது குறித்து வெளியிட்டு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நைஜீரியாவில் பிறந்துள்ள 70 ஆயிரம் குழந்தைகளுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான தாய்மார்கள் எய்ட்ஸ் நோயுடன் இருப்பதும், மேலும் மலேரியா , காசநோய் பாதிப்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

இந்த நோயை கட்டுப்படுத்த மாநில நடவடிக்கை கமிட்டி கட்டுப்படுத்த முழு முயற்சி எடுக்க வேண்டும். தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவும் இந்த எய்ட்சை கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து முழு அளவில் ஆய்வு செய்து வருகிறோம் என்றும் ஜாண் இடாகோ தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிபரத்தின் படி, இங்கு நகர பகுதிகளை விட கிராம பகுதிகளில்தான் எய்ட்ஸ் அதிகம் பரவுவதாகவும், இதன் கொடூரத்தை புரிய வைக்க தீவிர பிரசாரம் துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.நைஜீரியாவில் எய்ட்ஸ்சை ஒழிக்க 255 மில்லியன் டாலர் நிதியாக உலக வங்கி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Around 70,000 newborns in Nigerian are HIV positive, according to a new report from the country's government. The figures from the Ministry of Health were made public by Director-General of the National Agency for the Control of AIDS (NACA) John Idoko while he was visiting the southwestern state of Ogun on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X