For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘வாடகைத் தாய்’களை விரும்பும் இந்தியர்கள்... அதிகரிக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் !

Google Oneindia Tamil News

மும்பை: அதிகரிக்கும் குழந்தையின்மைப் பிரச்சினைகளால் நாட்டில் மலடு நீக்க கிளினிக்குகளும், செயற்கை முறை கருத்தரிப்புக்கான மருத்துவமனைகளும் அதிகரித்து வருகின்றன.

கடந்த 2010, 12ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் இப்படிப்பட்ட கிளினிக்குகளின் எண்ணிக்கை 15 சதவீதம் கூடுதலாகியிருந்தது. இது தற்போதைய புள்ளிவிவரப்படி இந்த எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதுதொடர்பான விவரத்தை இந்திய செயற்கை முறை கருத்தரிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :-

மலடு நீக்க சிகிச்சைகள்...

மலடு நீக்க சிகிச்சைகள்...

இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாத நிலையில் உள்ள பெண்களுக்கு இப்போது மலடு நீக்க சிகிச்சைகள் பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளன. இப்படிப்பட்ட சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கர்நாடகத்தில் அதிகம்...

கர்நாடகத்தில் அதிகம்...

நாட்டிலேயே கர்நாடகத்தில்தான் இப்படிப்பட்ட சிகிச்சைகளுக்கு அதிகம் பேர் வருகிறார்கள். இவர்களுக்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவை உள்ளன.

முதலிடத்தில் மகாராஷ்டிரா...

முதலிடத்தில் மகாராஷ்டிரா...

அதேசமயம், அதிக அளவிலான மருத்துவமனைகளின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதன்மையான இடத்தில் உள்ளது.

மலட்டுத்தன்மை குறைவு தான்...

மலட்டுத்தன்மை குறைவு தான்...

இந்தியாவைப் பொறுத்தவரை மலட்டுத்தன்மை என்பது அதிகரிக்கவில்லை என்ற போதிலும் கூட அதுதொடர்பான மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

புதிய தொழில்நுட்பங்கள்....

புதிய தொழில்நுட்பங்கள்....

இதில் பல புதிய தொழில்நுட்பங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக உறைய வைத்த கரு முட்டைகளைப் பயன்படுத்துவது முதல் வாடகைத் தாய் வரை பல நுட்பங்கள் இப்போது வந்து விட்டன.

கருமுட்டைப் பாதுகாப்பு...

கருமுட்டைப் பாதுகாப்பு...

இதில் 64 சதவீதம் பேர் உறைய வைத்த, பாதுகாக்கப்பட்ட கரு முட்டைகளைப் பயன்படுத்தி கருத் தரிப்பதை விரும்புகின்றனர்.

உறைய வைத்த கருமுட்டை...

உறைய வைத்த கருமுட்டை...

கடந்த 3 ஆண்டுகளில் 60 சதவீத உயர்வை இந்த தொழில்நுட்ப முறை கண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த உறைய வைத்த கருமுட்டைகளைப் பயன்படுத்தும் முறையில் கிட்டத்தட்ட முழுமையான வெற்றி கிடைப்பதால் பலரும் இதை விரும்பஆரம்பித்துள்ளனர்.

வாடகைத் தாய்...

வாடகைத் தாய்...

அதேபோல வாடகைத் தாய் முறைக்கும் ஆதரவு பெருகி வருகிறது. 44 சதவீதம் என்ற அளவில் இது உயர்ந்துள்ளது. பலரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விருப்பம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். சமீப காலம் வரை வெளிநாட்டினர்தான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற ஆர்வம் காட்டினர். தற்போது இந்தியர்களும் அதை விரும்ப ஆரம்பித்துள்ளனர்.

English summary
The rush to infertility clinics in the country grew annually at 15% between 2010 and 2012 as the number of such clinics rose by 20%, new statistics show. The data was collected by the Indian Society for Assisted Reproduction (ISAR) between 2010 and 2012 for the country's only voluntary registry of infertility clinics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X