For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தம்பி தேர்தல் முடிஞ்சப்புறம் ஓரமாப் போயி மிட்டாய், பலூன் வச்சு விளையாடு.. ராகுலுக்கு மோடி பதிலடி!

|

ராஞ்சி: எனது தேர்தல் பிரசாரத்திற்கான பணம் 'டாஃபி மாடல்' குஜராத் வளர்ச்சியிலிருந்து வந்த பணம் என்கிறார் ராகுல் காந்தி. இந்தத் தேர்தல் முடியட்டும். ராகுல் காந்தி 'டாஃபி' மற்றும் 'பலூனை' வைத்து வீட்டில் விளையாடப் போவதை நாம் பார்க்கததான் போகிறோம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, டாஃபி அதாவது மிட்டாய் மாடல் வளர்ச்சி கொண்ட குஜராத் என்று கிண்டலடித்திருந்தார். அதாவது மிட்டாய் விலைக்கு பெரும் பெரும் நிலத்தை கோடீஸ்வரர்களுக்கு கொடுத்து வருகிறார் மோடி என்று சாடியிருந்தார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, கிண்டலும் அடித்துள்ளார் மோடி. ஜார்க்கண்ட் மாநிலம், பசுகிநாத் என்ற இடத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தின்போது அவர் பேசுகையில் ராகுலைக் கிண்டலடித்தார்.

மோடி பேச்சு...

மோடி பேச்சு...

பலூன். மிட்டாய் வைத்து விளையாடு

தேர்தல் முடிந்ததும் ராகுல் காந்தி தனது வீட்டில் தனக்குப் பிடித்த மிட்டாய், பலூன்களை வைத்து விளையாடட்டும். நாம் அதைப் பார்க்கத்தான் போகிறோம்.

பாலகனாகவே இருக்கிறார்

பாலகனாகவே இருக்கிறார்

இன்னும் பாலகனாகவே இருக்கிறார் ராகுல். அவர் வளரவே இல்லை.

ஆதிக்கம் தகர்க்கப்படும்

ஆதிக்கம் தகர்க்கப்படும்

சோனியா காந்தி, ராகுல் காந்தி சாம்ராஜ்ஜியம் வீழ்த்தப்படும். அவர்களது ஆதிக்கம் தகர்க்கப்படும்.

தீவிரவாதம் அதிகரிக்க காங்கிரஸே காரணம்

தீவிரவாதம் அதிகரிக்க காங்கிரஸே காரணம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசே காரணம் என்றார் மோடி.

English summary
Addressing a public meeting in Jharkhand’s Basukinath area the BJP prime ministerial candidate said Gandhi would be left to play with “balloons’’ and “toffees’’ after the general elections. Earlier, in Hazaribagh, Modi attacked the Congress candidate Saurav Narayan Singh saying that Singh was yet to come out of his childhood. “The reign of mother (Sonia Gandhi) and the son (Rahul Gandhi) will end; soon the people of the country will see Shehzade playing with balloons and toffees after the election,” Modi said in Basukinath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X