English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు

தண்ணீர்ப் பற்றாக்குறையில் தார் பாலைவனத்துக்கு அடுத்த இடத்தில் தமிழகம்- நம்மாழ்வார்

0328 Tn Comes Next Thar Desert The Issue
திருச்செங்கோடு: தண்ணீர் பற்றாக்குறையில் இந்தியாவின் தார் பாலைவனத்திற்கு அடுத்த இடத்தில் இருப்பது நமது தமிழ்நாடு தான் என்று இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் மேம்பாட்டுக்குழு சார்பில், 'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இயற்கை வேளாண்மையின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், இயற்கை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் கலந்து கொண்டு பேசியதாவது:

பூமிக்கு தேவையான நீர் மேலேயிருந்து மழையாக, பனியாக வரவேண்டும். ஆனால், நாமோ பூமியை துளை போட்டு பூமிக்கு நடுவில் இருக்கிற நெருப்புக் குழம்பை நோக்கி போகிறோம்.

பாலையிலும் வளரும் பனைமரம் என்று சொல்வார்கள். ஆனால், வறட்சியால் தமிழகத்தில் பனைமரம் கூட செத்து போய் விட்டது.

தண்ணீர் பற்றாக்குறையில் இந்தியாவின் தார் பாலைவனத்திற்கு அடுத்த இடத்தில் இருப்பது நமது மாநிலம் தான்.

தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் நீர் ஆதாரம் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான்.

மலை மேல் மழை பெய்தால் தான் ஆறுகளில் தண்ணீர் கிடைக்கும். இதை அறிந்து தான் நீர் மேலாண்மையை கையாண்ட நம் முன்னோர், நம்மை ஆண்ட மன்னர்கள், வீணாகும் மழை நீரை சேமிக்க நாடு முழுவதும் 39 ஆயிரம் ஏரிகளை உருவாக்கினர்.

இன்று அந்த ஏரிகள் பஸ் ஸ்டாண்ட், நீதிமன்றம், கலெக்டர் அலுவலகங்களாக காட்சி தருகின்றன.

ஆலை புகை, வாகனப்புகை போன்றவற்றால் பூமிக்கு மேல் 15 முதல் 20 கிமீ உயரத்தில் கரிவளையம் உருவாகியுள்ளது.

கரி வளையத்தால் பூமியை விட்டு வெளியேற முடியாத வெப்ப சக்தியால், துருவ பனிமலைகள் உருகுகின்றன.

அதனால், கடல் மட்டம் உயர்ந்து கடலோர பட்டினங்கள் அழிவை எதிர் நோக்கியுள்ளன.

பூமி பந்தில் நிலப்பரப்பின் அளவு குறையும்போது இட நெருக்கடி, உணவு பஞ்சம், 'ஜெனடிக் டைவர்சிட்டி' எனும் மரபணு மாறுதல், வித்தியாசமான உணவு பழக்கம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும்.

இதே நிலையில் பூமியின் வெப்பம் உயர்ந்து கொண்டே போனால் இந்தியாவில் உள்ள வட மாநிலங்களின் நீர் ஆதாரமான கங்கை நதி 20 ஆண்டுகளில் வற்றிப் போகும்.

இந்தியாவின் 141 மாவட்டங்களில் கடுமையான வறட்சி, வெள்ளம் போனறவை ஏற்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை மேம்படுத்த இயற்கையின் சக்தியோடு இணைந்து செயல்பட்டால் பலன் கிடைக்கும்.

அடிப்பகுதி காட்டுக்கு, நடுப்பகுதி மாட்டுக்கு, நுனிப்பகுதி வீட்டுக்கு என்ற முறையில் உணவு சுழற்சி முறையை பின்பற்றி வந்தது வரைக்கும், உணவு சங்கிலி அறுந்து போகாமல் இருந்தது.

இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் புவி வெப்பமடைவதை வரும் காலத்தில் தடுக்க முடியும் என்றார்.

மார்ச் 28, 2010 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
Qualifier 2 , Eden Gardens, Kolkata
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.  
User Comments
Mohideen Batcha 30 Mar 2010 03:00 pm
இச்செய்தியை படிக்கும் அன்பர்களே, வாருங்கள் அனைவரும் ஒன்றுகூடி சுற்றுச்சூழலுக்காகவும், இயற்கை விவசாயத்திற்காகவும், மழை நீரை சேமிப்பதற்காகவும் போராடுவோம். பேசினாலோ அல்லது படித்தாலோ மட்டும் போதாது, ஒன்றுகூடி போராடினால்தன் பலன். Welcome dear friends
Reply
சிவகுமார் 30 Mar 2010 02:17 pm
இந்த நிலைமை வராமல் தடுக்க வேண்டியது நமது கடமை
Reply
MURUGAN S R 30 Mar 2010 09:17 am
இச்செய்தியை படிக்கும் அன்பர்களே, வாருங்கள் அனைவரும் ஒன்றுகூடி சுற்றுச்சூழலுக்காகவும், இயற்கை விவசாயத்திற்காகவும், மழை நீரை சேமிப்பதற்காகவும் போராடுவோம். பேசினாலோ அல்லது படித்தாலோ மட்டும் போதாது, ஒன்றுகூடி போராடினால்தன் பலன். Welcome dear friends, you and your friends Please contact murugansr@yahoo.co.in
Reply
எழுச்சி 29 Mar 2010 11:10 pm
தமிழக எழுச்சி கல்வெட்டில் பத்திக்க வேண்டியது, ஒரு சாமியார் போலி என்றது கல்லை எடுக்கும் தமிழன், கண்முன்னே இயற்க்கை வளமான மணல் திருடு போகும் போது மவுனமாக இருக்கிறான், போராடி பெறவேண்டிய நீரைக் கூட தமிழ் கவிதைக்கும் கவிஞனின் குடும்ப சொத்துக்கும் தாரை வார்க்கிறான், தன இனக் குருதி அகவை வேற்றுமை இல்லாமல் வடிந்த போதும் சின்னத் திரையில் ஒளிந்து கொள்கிறான், கல்லை திட்டிக் கொண்டு கள்வர்களுக்கு சாமரம் வீசுகிறான் பயத்தில்
Reply
jeyan 29 Mar 2010 08:58 pm
படிச்சவன் அரசியலுக்கு வரணும். ஆற்காட்டார் போன்ற வறண்ட மூளைகள் ஒதுங்கணும். அப்பதான்ன்ன்னன்ன்ன்
Reply
SANKARCPALLI 29 Mar 2010 06:44 pm
MR.NAMMALVAR SIR OLEASE SAY THE REMEDY TO AVOID THIS DANGER.SAVE THE WORLD BY MEANS OF YOUR WIDE KNOWLEDGE.THANK YOU SIR.
Reply
truth 29 Mar 2010 02:54 pm
இங்கே எவனுக்கும் அடுத்தவன் பற்றி கவலை இல்லை இன்று பணம் சம்பாதிக்க எது வேண்டுமானாலும் செய்யலாம் பணம்தான் முக்கியம் உழைக்கும் மக்கள் ஏமாளிகள் எனும் நிலை வந்து விட்டது,இந்த உலகில் இனி யாருக்கும் நிம்மதி இருகாது,எல்லோரும் அடித்துக்கொண்டு சாவார்கள்
Reply
வீர வன்னியன் ஆத்தூர் 29 Mar 2010 10:11 am
இந்த முட்டாள் கருணா அரசு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சானிகொம்பில்லிருக்க் தண்ணீர் தொட்டிகளுக்கும் பள்ளிசாலைகளுக்கும் பதிலாக மதுக்கடைகளை திறந்து வைத்து மக்களை மேலும் வறுமையில் தள்ளமுயன்றுகொண்டிருக்கிறது. மக்கள் இங்கே பல பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவித்துகொண்டிருக்க ஆளும் முக அரசு ரூ 800 கோடியில் சட்டசபை வளாகம் கட்டி மக்களை பற்றி எஙகளுக்கு கவலையில்லை அவர்களுக்கு தினமும் பக்கம்பக்கமாக அறிக்கை விட்டால் போதும் அவர்கள் வயிறு நிறைந்துவிடும் என்று முட்டாள்தனமான திட்டங்களை அறிவிக்கிறது.
Reply
அலக்ஸ் 29 Mar 2010 10:08 am
திரு. நம்மாழ்வார் அவர்கள் மிக சிறந்த இயற்கை விஞ்ஞானி. தமிழகம் அவரை பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பது தமிழகத்திற்குத்தான் நஷ்டம்.
Reply
காலம் 30 Mar 2010 01:26 am
நல்ல வேலை
Reply
Unmai 30 Mar 2010 01:31 am
நல்ல வேலை நாம் பிழைதுகொண்டோம்.
Reply
புகழ் 29 Mar 2010 09:49 am
எல்லாப் புகழும் கலைஞருக்கே, நதிகளையெல்லாம் அண்டை மாநிலத்துக்கு தாரை வாத்து, மணல் கொள்ளை மூலம் நதிகளின் தடன் தெரியாமல் அளித்து வருகிறார், எங்கேயோ இருந்த (தன்) மக்கள் இன்று விரல் விட்டு என்னும் பணக்கார வரிசையில், தமிழ்நாடு பாலைவனமாக ஆனால் என்ன மின்சாரம் கூட இல்லாத இடுகாடு ஆனால் என்ன? தமிழன் எப்போதுமே அண்டை மாநிலங்களையும், அரபு நாடுகளையும் நம்பித் தான் இருக்கிறான்
Reply
[ கருத்தை எழுதுங்கள் ]
Oneindia  Oneindia Login
Qualifier 2 , Eden Gardens, Kolkata
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.