Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஐடி துறையில் 2.5 லட்சம் புதிய வேலைகள்!- இன்போஸிஸ்

Published: Friday, November 27, 2009, 11:21 [IST]

It Inc Generate 2 5 Lakh Jobs Info

பெங்களூரு: ஐடி துறையில் அடுத்த ஆண்டுக்குள் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று ஐடி துறையின் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்போஸிஸ் தெரிவி்த்துள்ளது.

மேலும் 20000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் மோகன்தாஸ் பை கூறுகையில், ஐடி துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுக்கு 3 லட்சம் வேலைவாய்ப்புகள் இருந்தன. 2007-ம் ஆண்டு 3 லட்சத்துக்கும் அதிகமான வாய்ப்புகள் இருந்தன. கடந்த 18 மாதங்களில்தான் நிலைமை இத்தனை மோசம். இப்போது மீண்டும் மறு எழுச்சிக்கான காலம். அடுத்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே நல்ல மாறுதல்களைக் காணலாம்.

2.5 லட்சம் புதிய பணியாளர்கள் இந்தத் துறையில் தேவைப்படுவார்கள். இன்போஸிஸ் மட்டுமே 20000 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டு, அதற்கான பூர்வாங்க வேலைகளில் இறங்கியுள்ளதுஎன்றார்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 180 / 6, 59 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Royal Challengers Bangalore won by 24 runs
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Kings XI Punjab won by 50 runs