For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 வயது சிறுமிக்கு பாதுகாப்பு இல்லை, ஆனால் அம்பானிக்கு இசட் பிரிவா?: சுப்ரீம் கோர்ட் கேள்வி

Google Oneindia Tamil News

Mukesh Ambani
டெல்லி: ஆரம்பம் முதலே முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு வழங்குவதில் பல சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், தற்போது ‘ 5 வயது சிறுமி பாதுகாப்பு இல்லாமல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள். ஆனால், இவருக்கு ஏன் இசட் பிரிவு பாதுகாப்பு' என மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சில அச்சுறுத்தலின் எதிரொலியாக, தொழிலதிபர் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் மத்திய அரசுக்கு ரூ.16 லட்சம் வரை கட்டணமாக செலுத்துகிறார். இதனை இடதுசாரி கட்சிகள் கடுமையாக கண்டித்து உள்ள நிலையில், இது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய பாதுகாப்பு படை தவறாக பயன்படுத்தப்படுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது நீதிபதி சிங்வி, மத்திய அரசுக்கு சில கேள்விகளை எழுப்பினார்.

அதில் ‘பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறைவான சூழலில் தனிமனிதருக்கு மத்தியபடை பாதுகாப்பு வழங்குவது ஏன்? பாதுகாப்பு குறைபாடுகளால்தான் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாள். அப்படி தனிமனிதருக்கு பாதுகாப்பு வேண்டுமெனில், அவர்கள் தனியாக வாடகை காவலாளிகளை அமைத்து கொள்ளலாம்' என்றும் கூறினார்.

English summary
Centre's decision to provide 'Z' category security to the richest Indian Mukesh Ambani on Wednesday drew flak from the Supreme Court which asked why such people are given security cover by the government when the common man is feeling unsafe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X