For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தற்கொலையில் சென்னை நம்பர் 1… தமிழ்நாடுதான் டாப்…

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்களில் சென்னைவாசிகள்தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனராம்.

தேசிய குற்றப்பிரிவு ஆவணத்தின் அறிக்கையின் படி 2012ம் ஆண்டு இந்திய அளவில் தற்கொலை செய்து கொண்டவர்களில் தென்மாநிலங்களில் வசிப்பவர்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல், தேர்வில் தோல்வி போன்ற காரணங்களினால் தமிழ்நாட்டில் அதிக அளவில் தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

சென்னை டாப்

சென்னை டாப்

மெட்ரோ நகரங்களில் சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 2,183 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு அடுத்த படியாக பெங்களூருவில் 1,989 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாடு நம்பர் 1

தமிழ்நாடு நம்பர் 1

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்பவர்களில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. 2012ம் ஆண்டு மட்டும் 12.5 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் தற்கொலை மூலம் மரணத்தை தழுவியுள்ளனர்.

வறுமை வேலையின்மை

வறுமை வேலையின்மை

வறுமை, வேலையின்மை, போன்றவைகளினால் ஏற்படும் மனஅழுத்தம் பெரும்பாலானவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. கடந்த 2011ம் ஆண்டு இந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 41 ஆக இருந்தது. இது 2012ல் 176 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும்

இந்தியா முழுவதும்

கடந்த 2012ம் ஆண்டு நாடு முழுவதும் 14,151 முதியவர்கள், சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். முதியவர்கள் தற்கொலையிலும் தமிழகம்தான் டாப்பில் உள்ளதாம்.

நோய் பாதிப்பு

நோய் பாதிப்பு

எய்ட்ஸ், தீராத நோய், வலி போன்ற பிரச்சினைகளால் 25.6 சதவிகிதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 20.8 பேர் இந்தப்பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொண்டதாக பதிவாகியுள்ளது. T

காதல் தோல்வி

காதல் தோல்வி

காதல் தோல்வியினாலும், பரிட்சையில் பெயில் ஆனதற்காகவும் அதிக அளவில் தற்கொலை முடிவினை தேர்ந்தெடுத்துள்ளனர். குடும்பப் பிரச்சினையில் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்கள் 99 பேர் எனில் இவர்களில் 47 பேர் பெண்கள்.

அரசு கவனிக்குமா?

அரசு கவனிக்குமா?

தமிழ்நாட்டில் தற்கொலைகள் அதிகரித்துவருவது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கூறும் சமூக ஆர்வலர்கள் தற்கொலைகளை தடுக்கும் கவுன்சிலிங் மையங்களை நிறுவவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

பள்ளிகளில் கவுன்சிலிங்

பள்ளிகளில் கவுன்சிலிங்

இளம் தலைமுறையினர்களில் பெரும்பாலோனேர் பரிட்சையில் தோல்வி, காதல் தோல்வியினால் தற்கொலை முடிவினை எடுக்கின்றனர். எனவே மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Tamil Nadu has recorded the highest number of suicides by accounting for 12.5 per cent of the total cases reported in 2012. When it comes to specific issues like ‘love affairs’ and ‘failure in examination’ that led to suicides, the State has again topped in the south.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X