For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜிவ் கொலையாளிகளை தூக்கிலிட பாஜக ஏன் வலியுறுத்தவில்லை?: கபில் சிபல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குருவை தூக்கிலிட வலியுறுத்திய பாஜக தலைவர்கள் ராஜிவ் கொலையாளிகளை தூக்கிலிட ஏன் வலியுறுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கூறுகையில், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பாரதிய ஜனதா கட்சியின் எந்த தலைவரும் ராஜிவ் காந்தி கொலையாளிகளை தூக்கில் போடுவது குறித்து பேசியதாக எங்களுக்கு தெரியவில்லை.

Why BJP leaders are silent over execution of Rajiv Gandhi's killers, asks Kapil Sibal

நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பேசினர்.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் ராஜிவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக 20 ஆண்டுகாலமாக அமைதியாக இருக்கிறார்கள்.

அவர்கள் தீவிரவாதத்துக்கு எதிராக போராடவில்லை. வாக்குகளை குறிவைத்தே பேசுகிறார்கள். கடந்த 15 ஆண்டுகாலமாக ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று மோடி ஏன் வலியுறுத்தவில்லை?

இவ்வாறு கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Congress questioned why Narendra Modi and BJP were silent on the issue of execution of Rajiv Gandhi's killers when they had been vocal in demanding Afzal Guru's hanging and claimed that their aim was to garner votes and not fight terrorism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X